×

எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் என்ன? : மீண்டும் அளக்க நேபாளம், சீனா முடிவு

காத்மாண்ட்:  எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை மீண்டும் அளக்க நேபாளம் மற்றும் சீனா முடிவு செய்துள்ளன. உலகின் மிக உயரமான சிகரமாக இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரம் கருதப்படுகின்றது. கடல் மட்டத்துக்கு மேல் 8,848 மீட்டர் உயரத்தில் இது அமைந்துள்ளது. இந்த உயரம் கடந்த 1954ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கீட்டின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு வந்தது. கடந்த 2015ம் ஆண்டு நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கருத்துக்கள் நிலவி வருகின்றது.

இந்நிலையில், இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சீன அதிபர் ஜின்பிங் நேபாளம் சென்றார். அந்நாட்டின் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலியுடன் சீன அதிபர் ஜின்பிங் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளப்பதற்கு இருநாடுகளும் முடிவு செய்துள்ளன. மேலும் அடுத்த 2 ஆண்டில் ரூ.5600 கோடி நிதியுதவி வழங்கவும் சீனா உறுதி அளித்தது.

Tags : Mount Everest ,China ,Nepal , height of Mount Everest,Nepal and China , Re-Scale
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...