சில்லரை விலை பணவீக்கம் கிடுகிடு

புதுடெல்லி: சில்லரை விலை பண வீக்கம் கடந்த செப்டம்பரில் 3.99 சதவீதமாக அதிகரித்துள்ளது. உணவு பொருட்களின் விலை அதிகரித்ததே இதற்கு காரணம். சில்லரை விலை பண வீக்கம் கடந்த ஆகஸ்டில் 3.28 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு செப்டம்பரில் 3.7 சதவீதமாக இருந்தது. ஆனால், கடந்த செப்டம்பர் மாதத்துக்கான பண வீக்க விகிதம் 3.99 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கடந்த மாதத்தில் உணவு பொருட்களுக்கான பண வீக்க விகிதம் 5.11 சதவீதமாக உள்ளது. இதற்கு முந்தைய மாதம் இது 2.99 சதவீதம். உணவு பொருட்களின் விலை திடீரென உயர்ந்ததே பண வீக்கம் உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக காய்கறிகள் விலை 15.4 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

Related Stories: