பார்முலா 1 கார் பந்தயம் தொடர்ந்து 6வது முறையாக மெர்சிடிஸ் அணிசாம்பியன்

சுஸுகா: பார்முலா 1 கார் பந்தயத்தில் மெர்சிடிஸ் அணி தொடர்ந்து 6வது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. நடப்பு சீசனின் 17வது பந்தயமாக நடைபெற்ற ஜப்பான் கிராண்ட் பிரீ போட்டியில் மெர்சிடிஸ் அணி வீரர் வால்டெரி போட்டாஸ் (1:21:46.755) முதலிடம் பிடித்தார். பெராரி அணியின் செபாஸ்டியன் வெட்டல் (+13.343 விநாடி) 2வது இடமும், மெர்சிடிஸ் நட்சத்திரம் லூயிஸ் ஹாமில்டன் (+13.858 விநாடி) 3வது இடமும் பிடித்தனர்.

இதுவரை நடந்துள்ள பந்தயங்களின் முடிவில் மொத்தம் 612 புள்ளிகள் பெற்று முன்னிலை வகிக்கும் மெர்சிடிஸ் அணி தொடர்ந்து 6வது ஆண்டாக அணிகளுக்கான உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தது. பெராரி (433), ரெட் புல் ரேசிங் ஹோண்டா (323) அடுத்த இடங்களில் உள்ளன. டிரைவர்களுக்கான போட்டியில் மெர்சிடிஸ் வீரர் ஹாமில்டன் (இங்கிலாந்து) 338 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். சக வீரர் போட்டாஸ் (274) 2வது இடத்திலும், பெராரி அணியின் சார்லஸ் லெக்ளர்க் (221) 3வது இடத்திலும் உள்ளனர். அடுத்து மெக்சிகோ கிராண்ட் பிரீ பந்தயம் அக். 25ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடைபெறுகிறது.

Related Stories: