உலக இளைஞர் செஸ் தங்கம் வென்றார் பிரக்‌ஞானந்தா

மும்பை: உலக இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் பிக்ஞானந்தா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மும்பையில் நடைபெற்ற இப்போட்டியில் ரஷ்யா, உக்ரைன், மலேசியா, சீனா, மங்கோலியா, அஜர்பைஜான் உட்பட 60 நாடுகளை சேர்ந்த 700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். சிறுவர்கள், சிறுமிகளுக்கு தனித்தனியே யு14, யு16, யு18 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. யு18 ஓபன் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா (14) பங்கேற்றார். ஜெர்மனி வீரர் வாலன்டின் பக்கெல்ஸ் உடன் மோதிய கடைசி போட்டியின் 11வது சுற்றின் முடிவில் 9 புள்ளிகள் பெற்றார். அதன்மூலம் யு18 பிரிவில் தங்கம் வென்றதுடன் சாம்பியன் பட்டமும் பெற்றார்.

இந்த பிரிவில் ஆர்மீனியா வீரர்கள் சாந்த் சர்க்ஸ்யன் 8.5 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும், ஆர்தர் டேவ்ட்யன் 8 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து வெண்கலப்பதக்கமும் வென்றனர். இந்தப் போட்டியில் இந்தியா ஒரு தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் உட்பட 7 பதக்கங்களை வென்றது. இதில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா மட்டுமே இந்தியாவுக்கு தங்கம் வென்று அசத்தினார்.

Related Stories: