×

ஓய்வு பெறுவதை டோனிதான் முடிவு செய்ய வேண்டும்... வாட்சன் சொல்கிறார்

சென்னை: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது என்பதை டோனி தான் முடிவு செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் கூறினார். இது குறித்து சென்னையில் அவர் நேற்று கூறியதாவது: டோனி தற்போது முழு மனதுடன், பலத்துடன், துடிப்புடன் செயல்பட்டு வருகிறார். ஓய்வு பெறுவது குறித்து அல்லது தொடர்ந்து விளையாடுவது பற்றி அவர்தான் முடிவு செய்ய வேண்டும். இது அவரின் தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்தது. ஆஸ்திரேலிய அணியினரை இந்திய அணி போல தயார்படுத்தி வருகிறோம். நிச்சயமாக ஆஸ்திரேலிய அணி மீண்டும் முதன்மை அணியாக வரும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் என்னை தேர்வு செய்தால் நிச்சயம் சென்னை அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன்.  இவ்வாறு வாட்சன் கூறினார்.

Tags : Tony ,Watson ,Dhoni , Dhoni , retire, Watson
× RELATED தோனியை விட சிஎஸ்கேக்கு இந்த ஆண்டு...