இந்தியா முன்னேற்ற பாதையில் செல்கிறது: இந்தியாவுடன் உலக தலைவர்கள் கைகோர்த்து நிற்கின்றனர்.. அரியானாவில் பிரதமர் மோடி பேச்சு

அரியானா: 288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கும், 90 உறுப்பினர்களை கொண்ட அரியானா சட்டசபைக்கும் வருகிற 21-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 24-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதன் அடிப்படையில் பிரதமர் அரியானாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பேசிய அவர்; இந்திய அரசு தற்போது எந்தவொரு கடினமான சவாலையும் எதிர்கொள்கிறது.

கசப்பாக இருந்தாலும் தீர்க்கமான முடிவை எடுத்து வருகிறோம். காஷ்மீர் விவகாரத்தில் இந்தியர்கள் யாரும் விட்ட கொடுக்க மாட்டார்கள். காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால் காங்கிரஸ் காஷ்மீர் விவகாரத்தில் எதிர் கருத்தை கொண்டுள்ளது. இந்தியா முன்னேற்ற பாதையில் செல்கிறது. இந்தியாவுடன் உலக தலைவர்கள் கைகோர்த்து நிற்கின்றனர். கொடுத்த வாக்குறுதிகளை நான் நிறைவேற்றி வருகிறேன். எதிர்கட்சியினர் மக்களை பிரித்தாளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் ராணுவ வீரர்களின் தியாகம் உண்மையில் போற்றப்படுகிறது. அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் வாங்கி வழங்கி வருகிறோம். வீரர்கள் கேட்டதை பெறும் நிலை இப்போது உருவாகி உள்ளது எனவும் கூறியுள்ளார்.

Related Stories: