கொல்லத்தில் சொத்துக்காக தாயை உயிரோடு புதைத்த மகன்: போலீஸ் விசாரணையில் அம்பலம்

திருவனந்தபுரம்: கொல்லத்தில் சொத்துக்காக தாயை அடித்து வீட்டு ேதாட்டத்தில் உயிரோடு புதைத்த மகனை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கொல்லம்  செம்மான்முக்கு பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசன். இவரது மனைவி சாவித்திரி  (72). இந்த தம்பதிக்கு சுனில் (51) என்ற மகனும், லாலி என்ற மகளும் உள்ளனர். சுனில்  குடித்துவிட்டு வந்து அடிக்கடி தாயாருடன் தகராறு செய்வது வழக்கமாம்.  சாவித்திரி பெயரில் சொத்துகள் உள்ளன. அதை எழுதி கேட்டு தகராறு  ெசய்துள்ளார். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 3ம் தேதி சாவித்திரி திடீரென மயமானார்.

இது குறித்து லாலி கொல்லம் கிழக்கு போலீசில் புகார் செய்தார். புகாரில்  தாயை சுனில் அடிக்கடி கொடுமைப்படுத்தியால் அவர் மீது சந்தேகம் இருப்பதாக  கூறினார். இதையடுத்து போலீசார் அவர் விசாரித்தனர். அவர் தனக்கு  எதுவும் தெரியாது என்று கூறி விட்டார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுனிலும் திடீரென மாயமானார். இதனால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து பல்வேறு இடங்களிலும் சுனிலை சல்லடை போட்டு தேடினர். ஒரு கட்டத்தில் அவர் போலீசில் சிக்கினார்.

தொடர்ந்து அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணையில் தாயை அடித்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். உடலை வீட்டின் பின்புறம் உள்ள செப்டிங் டேங்க் அருகே  புதைத்துள்ளதாகவும் கூறினார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவர் அளித்த தகவல்படி போலீசார் உடலை ேதாண்டி எடுத்து பிரேத  பரிசோதனைக்கு அனுப்பினர். இதில், சுனில் போதையில் தனது தாயை தாக்கியுள்ளார். இதில் மயங்கி விழுந்த அவரை இறந்துவிட்டதாக நினைத்து உயிரோடு இருக்கும்போதே குழிதோண்டி புதைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை  வந்த பின்னரே மரணத்துக்கான முழு காரணம் தெரியும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: