அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவால் போக்குவரத்து பாதிப்பு: 3 அடி ஆழத்திற்கு பனிகள் படர்ந்திருப்பதாக தேசிய வானிலை மையம் தகவல்

நியூயார்க்: மத்திய மற்றும் வடக்கு அமெரிக்காவில் வழக்கத்திற்கு மாறாக நிலவும் குளிர்ந்த வெப்பநிலை மற்றும் அதிவேக காற்றினால் ஏற்பட்ட பனிப்பொழிவால் பல பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வடக்கு டகோடா பகுதியில் உள்ள குல்ம் நகரத்தில் ஏற்பட்ட பனிப்புயலால்  சாலைகள் முழுவதும் பனிகளால் சூழப்பட்டுள்ளதால் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது. சாலையில் திரும்பிய திசையெல்லாம் பனி கொட்டிக்கிடப்பதால் ஏராளமான வாகனங்கள் விபத்தில் சிக்கியுள்ளன. இதனால் சாலைகளில் பனி படந்துள்ளதால் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பனியால் போர்த்தப்பட்டு காணப்படுகிறது.

கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலின் மேற்பரப்பு உறைந்து காணப்படுகிறது. இந்தப் பனிப்புயலால் வடக்கு டகோடா பகுதியில்சாலையில் மூன்றடி ஆழத்திற்கு பனிகள் படர்ந்திருப்பதாக அந்நாட்டு தேசிய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் பனிப்பொழிவு இருப்பதால் சாலைகளில் பயணம் மேற்கொள்வது சாத்தியமில்லை என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: