பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி தேர்வு: இது தொடர்பான முறையான அறிவிப்பு அக்.23-ம் தேதி வெளியிடப்படும்: ராஜீவ் சுல்கா

மும்பை: பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலியை தேர்வு செய்துள்ளோம் என ராஜீவ் சுல்கா தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொறுப்புகளுக்கு போட்டியிட மனுதாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். இந்நிலையில் மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை அலுவலகத்திற்கு முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி வந்தார். பின்னர் பிசிசிஐ தலைவர் பதவிக்காக மனுதாக்கல் செய்துள்ள கங்குலி பேட்டியளித்தார். அப்போது; எந்த அரசியல் கட்சி தலைவருடனும் தனக்கு தொடர்பில்லை என விளக்கம் அளித்தார். முதல் தர கிரிக்கெட்டை மேலும் வலுப்படுத்த முயற்சிப்பேன். ஐபிஎல் தொடர்பான சிக்கல்களை பிசிசிஐ தலைவராக நீக்க முயற்சிப்பேன்.

மேற்கு வங்க கிரிக்கெட் தலைவராக இருந்த அனுபவம் எனக்கு உள்ளது என கூறியுள்ளார். தலைவர் பதவிக்கு போட்டியிட யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் கங்குலி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பேட்டியளித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் உறுப்பினர் ராஜீவ் சுல்கா; பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலியை தேர்வு செய்துள்ளோம். கங்குலி தேர்வானது தொடர்பான முறையான அறிவிப்பு அக்.23-ம் தேதி வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: