×

ஸ்டான்லி மருத்துவமனையில் மூட்டு அழற்சி விழிப்புணர்வு

தண்டையார்பேட்டை: ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 12ம் தேதி உலக மூட்டு அழற்சி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மூட்டு அழற்சி தினம் நேற்று முன்தினம்  அனுசரிக்கப்பட்டது. அப்போது, இந்த நோய் பாதிப்பு குறித்து மருத்துவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் சாந்தி மலர் கூறுகையில், ‘‘முடக்கு வாதம், மூட்டு அழற்சி நோயால் மூட்டுகளில் வீக்கம் வலி விரைப்புத்தன்மை, மூட்டு இயக்கம் குறைதல் போன்றவை ஏற்படும்.  உணவு முறைகள் மற்றும் பரம்பரை  வழியாக வரும் நோயாக இது உள்ளது. உடனடியாக மூட்டுகளில் வலி இருந்தால் மருத்துவமனையில் வந்து அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்,’’ என்றார். நிகழ்ச்சியில், நிலைய மருத்துவர் ரமேஷ் மற்றும் துறை பேராசிரியர்கள் ஹரிஹரன் ஸ்ரீதர், உதவி பேராசிரியர் ஆகியோர் கலந்துகொண்டனர்.



Tags : Stanley Hospital , Stanley ,Hospital,Awareness
× RELATED மணலி நெடுஞ்சாலையில் நேற்று மாநகர...