×

டிரைவர் கொலையில் 3 பேர் பிடிபட்டனர்

புழல்: குன்றத்தூர் அடுத்த கோவூர், அம்பாள் நகர், கம்பர் தெருவை சேர்ந்தவர் முரளி (27), ஆட்டோ டிரைவர். இவர், கடந்த 6ம் தேதி இரவு செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஜிஎன்டி சாலை ஓரத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்து வந்த செங்குன்றம் போலீசார், சடலத்தை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், ஆட்டோ டிரைவர் முரளி, ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்படும்  வாகனங்களில் இருந்து பேட்டரிகளை திருடி வந்துள்ளார். இதை பார்த்து ஆத்திரமடைந்த அதே பகுதியை சேர்ந்த அனில் (எ) மகேஷ் (32), சம்பத் (30), அருண் (20) ஆகியோர் சேர்ந்து முரளியை உருட்டுக்கட்டையால் அடித்து கொன்றது  தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் கைது செய்து, பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : murder , driver's ,murder, 3 people ,caught
× RELATED டிரைவர் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 3 பேர் கைது