×

இரும்பு குடோனை சூறையாடிய 3 பேர் கோர்ட்டில் சரண்

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பிரதான சாலையில் காஜா முகைதீன் என்பவர் பழைய இரும்பு குடோன் வைத்துள்ளார். கடந்த 7ம் தேதி இங்கு வந்த 8 பேர் கொண்ட கும்பல், மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்டனர். ஆனால்,  மாமூல் தராததால் ஆத்திரமடைந்த அவர்கள், குடோனை சூறையாடினர். இதை தட்டிக்கேட்ட  2 ஊழியர்களையும் தாக்கிவிட்டு  தப்பி சென்றனர். இதுகுறித்து சங்கர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடியவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய ஓட்டேரியை சேர்ந்த சிலம்பரசன் மற்றும் விக்கி, ஆகியோர் எழும்பூர் நீதிமன்றத்திலும், அனகாபுத்தூரை சேர்ந்த விமல்ராஜ் பெரும்பதூர் நீதிமன்றத்திலும் சரணடைந்தனர். தலைமறைவாக  உள்ள  மற்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.Tags : robbery ,court , Looted ,Iron Curtain, 3 others,court
× RELATED வெளிநாடுகளில் சென்னை வந்த 3 பேருக்கு கொரோனா உறுதி