நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

சென்னை: எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்  வெளியிட்ட அறிக்ைக:எஸ்டிபிஐ கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில், வம் 21ம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில்  கட்சியின் நிலைப்பாடு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தற்போதைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு இந்த இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டது.

எனவே, இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்தி, நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன்  மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில்  போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் ஆகியோரின் வெற்றிக்குப்  பணியாற்றுமாறு கட்சி தொண்டர்களை கேட்டுக்கொள்கிறேன்.

Related Stories: