கேரளாவில் பரபரப்பு சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோ பதிவேற்றம்: 12 பேர் கைது

திருவனந்தபுரம்: கேரளாவில்  பேஸ்புக், வாட்ஸ் அப் உட்பட சமூக வலைதளங்களில் சிறுவர்,  சிறுமிகளின் ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்த  கும்பலை சேர்ந்த 12 பேரை போலீசார் அதிரடியாக கைது  செய்தனர்.பேஸ்புக்,  வாட்ஸ் அப்  உட்பட சமூக வலைத்தளங்களில் 18 வயதுக்கு கீழ் உள்ள  சிறுவர், சிறுமிகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிகளவில்  பரவி வருவதாக சர்வதேச போலீசுக்கு (இன்டர்போல்) ஏராளமான புகார்கள்  வந்தன.  இதையடுத்து சர்வதேச போலீசார் நடத்திய விசாரணையில் கேரளாவில் இருந்து  பெருமளவில் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு  வருவது தெரியவந்தது. இதுகுறித்து இன்டர்போல் கேரள போலீசுக்கு  தகவல்  தெரிவித்தது. மேலும் இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட  கும்பலை கைது செய்ய கோரியது.

Advertising
Advertising

இதையடுத்து கேரள சைபர் கிரைம் ஏடிஜிபி  மனோஜ் ஆபிரகாம் தலைமையில் ‘ஆபரேஷன் பி-ஹண்ட்’ என்ற பெயரில் ஒரு தனிப்படை  அமைக்கப்பட்டது. மேலும் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம்  செய்யும்  கும்பலை பிடிக்க வாட்ஸ் அப், பேஸ்புக் உட்பட சமூக இணையதள  குரூப்புகளை ரகசியமாக இந்த தனிப்படை கண்காணித்து வந்தது. இதில் 100க்கும்  மேற்பட்ட குரூப்புகளில் சிறுவர், சிறுமிகளின் ஆபாச படங்கள் மற்றும்  வீடியோக்கள்  பகிரப்பட்டு வந்தது தெரியவந்தது.இதையடுத்து இந்த  தனிப்படை நேற்று திருவனந்தபுரம், எர்ணாகுளம், கண்ணூர், பாலக்காடு,  பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் அதிரடி  சோதனை நடத்தியது. இதில் சமூக வலைதளங்களில் ஆபாச  படங்கள் மற்றும்  வீடியோக்களை பதிவேற்றம் செய்த திருவனந்தபுரத்தை சேர்ந்த பிஜூ பிரசாத்,  முகமது பஹாத், பத்தனம்திட்டாவை சேர்ந்த ஜேஸ், சுஜித், எர்ணாகுளத்தை  சேர்ந்த அனூப், ராகுல்கோபி, கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த  ஜிஸ்ணு, லிஜேஸ்,  ரமித் உட்பட 12 பேர் கைது  செய்யப்பட்டனர். இவர்கள் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம்  செய்ய பயன்படுத்திய லேப்-டாப், செல்போன், மோடம், ஹார்டு டிஸ்க், மெமரி  கார்டுகள் உள்ளிட்ட பொருட்களையும் போலீசார் கைப்பற்றினர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘சிறுவர், சிறுமிகளின் ஆபாச படங்களை  பார்ப்பதோ, பகிர்வதோ, கைவசம் வைத்திருப்பதோ குற்றமாகும். இதற்கு 5 ஆண்டுகள்  வரை சிறைத்தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்’’  என்றனர்.

Related Stories: