×

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் டானில் மெட்வதேவ் சாம்பியன்

பெய்ஜிங்: சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரஷ்ய வீரர் டானில் மெட்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றார்.இறுதிப் போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவுடன் (22 வயது, 6வது ரேங்க்) மோதிய மெட்வதேவ் (23 வயது, 4வது ரேங்க்) 6-4, 6-1 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை கைப்பற்றினார். இப்போட்டி 1 மணி, 13 நிமிடத்திலேயே  முடிவுக்கு வந்தது. ஏடிபி போட்டிகளில் ஸ்வெரவுடன் 5 முறை மோதியுள்ள மெட்வதேவ் முதல் முறையாக வெற்றியை வசப்படுத்தினார்.மேலும், யுஎஸ் ஓபன் உட்பட மெட்வதேவ் கடைசியாக விளையாடிய 6 தொடர்களிலும் இறுதிப் போட்டி வரை முன்னேறி  உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Dennis Tanil Medvedev Champion ,Shanghai Masters ,Dennis Tan , Shanghai ,Masters Dennis, Tanil Medvedev
× RELATED ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்...