அரியானா விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க் கடன்: பாஜ தேர்தல் அறிக்கை

சண்டிகர்: வட்டியில்லா பயிர் கடன் வழங்குவது உட்பட பல்வேறு வாக்குறுதிகளை அரியானா சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் பாஜ அளித்துள்ளது.அரியானா மாநிலத்தில் வருகிற 21ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பாஜ நேற்று தனது தேர்தல் அறிக்கையை  வெளியிட்டது. பாஜ செயல் தலைவர் ஜேபி நட்டா இதை வெளியிட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘‘இந்த தேர்தல் அறிக்கை சாதாரணமானது அல்ல. இது அர்ப்பணிப்பு அறிக்கை. இது மிகவும் முக்கியமான மற்றும் படிக்கப்பட்ட ஆவணம். இதனை தயாரிப்பதற்காக அதிக முயற்சிகள் எடுக்கப்பட்டது. இது  கொள்கையளவில் இல்லாமல் உண்மையான நடைமுறைக்குரிய செயல்பாடுகளை கொண்டுள்ளது,” என்றார்.

இந்த தேர்தல் அறிக்கையில், எஸ்சி சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு பிணை ஏதுமின்றி இன்றி ரூ.3 லட்சம் வரை வங்கிகடன், விவசாயிககளுக்கு வட்டியில்லாமல் ரூ.3 லட்சம் வரை பயிர்க் கடன், ரூ.500 கோடி ஒதுக்கீட்டில் 25 லட்சம்  இளைஞர்களுக்கு திறன் வளர் பயிற்சிகள், முதியோர் ஓய்வூதியம் ரூ.3000 வழங்குவது, காசநோய் இல்லா மாநிலமாக மாற்ற நடவடிக்கை, 2000 சுகாதார மையங்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.

Related Stories: