காஷ்மீர் எல்லையில் பாக். துப்பாக்கிச்சூடு

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்தியது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் ரத்து செய்ப்பட்ட பின்னர் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடித்து வருகின்றது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்  நடத்தியுள்ளது. கதுவா மாவட்டத்தில், சர்வதேச எல்லையோரத்தில் உள்ள கிராமங்கள், ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு 8.45 மணிக்கு ஹிராநகரின் மன்யாரிசோர்காலி பகுதியில்  பாகிஸ்தான் வீரர்கள் தாக்குதல் நடத்தினர்.  நேற்று அதிகாலை 5.30 மணிக்குதான் இந்த தாக்குதல் முடிவுக்கு வந்துள்ளது. இந்திய வீரர்களும் இதற்கு தகுந்த பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை.

Related Stories:

>