×

கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை: கூட்டநெரிசலை தவிர்க்கும் வகையில் தீபாவளிக்கு 8க்கும் அதிகமான சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் தென் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் தொழில், வணிகம், படிப்பு சம்பந்தமாகவும், ஐடி நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் அதிகம் பேர் வசித்து வருகின்றனர். அவர்கள் பண்டிகையை தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதன்படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதற்கு முந்தைய நாள் சனிக்கிழமை விடுமுறை என்பதாலும் முன்கூட்டியே அதாவது வெள்ளிக்கிழமை 25ம் தேதி இரவே அனைத்து மக்களும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அதற்காக முன்கூட்டியே ரயில்கள், பேருந்துகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு காத்திருக்கின்றனர்.

மேலும், கன்னியாகுமரி, செங்கோட்டை, நாகர்கோவில், ெநல்லை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி போன்ற பகுதிகளுக்கும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திரா, தெலுங்கனா, மும்பை, டெல்லி, ெபங்களூர், கோவை, சேலம், ஈரோடு போன்ற பகுதிகளுக்கு இயக்கப்படும் ரயில்களில் ஏற்கனவே முன்பதிவு முடிந்து விட்டது. மேலும் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவரிகள் எண்ணிக்கை தான் அதிகமாக உள்ளது. எனவே தீபாவளி பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு சிரமமின்றி செல்ல தெற்கு ரயில்வே சார்பில் சிறப்புரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிக்கைக்கு 8 சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு ரயில்கள் இயக்குவது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது.

அதில் தீபாவளி பண்டிகையின் போது மக்கள் சிரமமின்றி செல்லும் வகையில் 8 சிறப்பு ரயில்கள் அல்லது அதற்கு மேலாக சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தீபாவளி பண்டிகையொட்டி செங்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், கோவை, சேலம் போன்ற பகுதிகளுக்கு தெற்கு ரயில்வே சார்பில் 8 சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எத்தனை ரயில்கள் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை, வேண்டுமானால் கூடுதலாக ரயில்கள் இயக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே எத்தனை ரயில்கள் எந்தெந்த ஊர்களுக்கு இயக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு ரயில்வே நிர்வாகம் சார்பில் முறையான அறிவிப்புகள் வெளியிடப்படும்’ என்றார்.

Tags : Diwali , Deepavali, Special Trains
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...