ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசு முன்வரவில்லை; மாநில அரசு தட்டிக்கேட்கவும் இல்லை... ஸ்டாலின் பேச்சு

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்; மக்களுக்கு அல்ல, தங்களுக்காகவே ஆட்சி நடத்துகின்றனர் அதிமுகவினர். தமிழகத்தில் நடைபெறுவது கொடுமையான ஆட்சி; விலைவாசியை உயர்த்திவிட்டனர், மின்கட்டணத்தை உயர்த்திவிட்டனர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நந்தன் கால்வாய் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். நீட் என்ற கொடுமையான தேர்வால் தமிழக மாணவர்கள் தற்கொலை செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்டதை மூடி மறைத்தது அதிமுக அரசு.

Advertising
Advertising

முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் மக்களுக்காக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. தமிழக விவசாயிகளைப் பற்றி அதிமுக அரசுக்கு எந்தக் கவலையும் இல்லை. சர்க்கரை ஆலை நிலுவைத் தொகை விவகாரத்தில் அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய முடியாத ஆட்சிதான் தமிழகத்தில் நடந்து வருகிறது. அதிமுக ஆட்சிக்கு பாடம் புகட்ட மக்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என கூறியுள்ளார்.

Related Stories: