ஜம்மு-காஷ்மீர்,லடாக் ஒரு துண்டு நிலம் அல்ல;அது இந்தியாவின் கிரீடம்... மராட்டிய மாநிலத்தில் பிரதமர் மோடி பேச்சு

மகாராஷ்டிரா: 288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கும், 90 உறுப்பினர்களை கொண்ட அரியானா சட்டசபைக்கும் வருகிற 21-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 24-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதன் அடிப்படையில் பிரதமர் நரேந்திர மோடி மஹாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, ஜல்கான் என்ற இடத்தில் வாக்கு சேகரித்த அவர்; காஷ்மீருக்கான சிறப்பு சட்டம் நீக்கப்பட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பாகிஸ்தான் மொழியில் பேசுவதாக குற்றம் சாட்டினார். சர்வதேச அளவில் இந்தியாவுக்கு மிகப்பெரிய இடம் கிடைத்துள்ளது.

காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட தயாரா என்று எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இதை செய்ய எதிர்க்கட்சிகளுக்கு சக்தி உண்டா என்றும்,  நாட்டு மக்கள் அனுமதிப்பார்களா என்றும்  பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். எங்களை பொறுத்தவரை ஜம்மு-காஷ்மீர்,லடாக் ஒரு துண்டு நிலம் அல்ல;அது இந்தியாவின் கிரீடம் எனவும் கூறினார். மேலும் பேசிய அவர்; மகாராஷ்டிராவை முன்னோக்கி அழைத்து செல்வதில் பாஜகவுக்கு வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பெண்கள் முன்னேற்றம் தொடர்பான அம்மாநில அரசின் பல  திட்டங்கள் சிறப்பாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Related Stories: