ரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்தியாவின் மஞ்சு ராணி

ரஷ்யா: ரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மஞ்சு ராணி வெள்ளிப்பதக்கம் வென்றார். 48 கிலோ இறுதிப்போட்டியில் ரஷ்யாவின் எகாட்டரினாவிடம் 4-1 என்ற புள்ளிக்கணக்கில் மஞ்சு தோல்வியடைந்தார். தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா சார்பில் மஞ்சு ராணி மட்டுமே தகுதி பெற்ற நிலையில் தங்க பதக்கம் பெரும் வாய்ப்பை இழந்தார். 11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது.

இதன் 48 கிலோ கிராம் எடைப்பிரிவில் இந்தியாவின் மஞ்சு ராணி பங்கேற்றார். இதன் அரையிதியில் தாய்லாந்தின் சுதாமத் ரக்சாத்தை வீழ்த்திய மஞ்சு ராணி ஃபைனலுக்கு தகுதி பெற்றார். இதையடுத்து இவர் தங்கப்பதக்கம் வென்று அசத்துவார் என ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்நிலையில் ஃபைனலில் மஞ்சு ராணி ரஷ்யாவின் ஏக்தாரினாவை எதிர்கொண்டார். பரபரப்பான துவங்கிய ஃபைனலின் முதல் சுற்றில் ரஷ்ய வீராங்கனையிடம் ராணி அதிக பஞ்ச் வாங்கினார்.

தொடர்ந்து இரண்டாவது சுற்றிலும் ராணி சொதப்பலாக ஆடினார். இறுதியில், இந்தியாவின் மஞ்சு ராணி ரஷ்யாவின் ஏக்தாரினாவிடம் 1-4 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியை சந்தித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்நிலையில் மேரி கோமின் 18 ஆண்டு சாதனையை தகர்க்கும் மஞ்சு ராணியின் கனவு கலைந்தது. ஆனால் மேரி கோமிற்கு பிறகு உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை மஞ்சு பெற்றார்.

Related Stories: