மும்பையில் நடைபெற்ற உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கம் வென்றார் சென்னை வீரர் பிரக்யானந்தா

மும்பை: உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 10வது சுற்று ஆட்டத்தில், 18 வயதுக் குட்பட்டோருக்கான பிரிவில் கிராண்ட்மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்யானந்தா (வயது 14), லிதுவேனியாவின் பாவ்லிஸ் பல்டினிவிசியசை எதிர்கொண்டார். இதில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய பிரக்யானந்தா 63வது காய் நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதனால் மொத்தம் 8.5 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வெல்லும் வாய்ப்பை நெருங்கினார். அடுத்த இடத்தில் ஆர்மேனியா வீரர் ஷந்த் சர்க்ஸ்யான் (8 புள்ளி) இருந்துள்ளார். இதனிடையே இன்று 11வது மற்றும் கடைசி சுற்று ஆட்டம் நடந்தது.

Advertising
Advertising

இந்த போட்டியில் பிரக்யானந்தா வெற்றி பெற்று தங்க பதக்கம் தட்டி சென்றார். 18 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் வெற்றி பெற்றுள்ள சிறுவன் பிரக்யானந்தாவுக்கு மனப்பூர்வ வாழ்த்துகள் என செஸ்.காம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா உன்னால் பெருமை அடைகிறது என தெரிவித்து உள்ளது. அவர் 2,700க்கு மேல் ரேட்டிங் பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 18 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் அவர் பெற்றுள்ள முதல் தங்க பதக்கம் இதுவாகும். போட்டிகளை பதக்க வெற்றியுடன் முடித்த இந்திய தரப்பில் 6 பதக்கங்கள் வெல்லப்பட்டு உள்ளன. அவற்றில் 3 வெள்ளி பதக்கங்களும் அடங்கும் என தெரிவித்துள்ளது.

Related Stories: