பீகாரில் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டி வேலூர் வீரர், வீராங்கனைகள் பயணம்: கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர்

வேலூர்: வேலூர் பளு தூக்கும் பயிற்சி மையத்தின் வீரர், வீராங்கனைகள் பீகாரில் நடக்கும் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். தேசிய அளவிலான இளைஞர் மற்றும் இளையோர் பளு தூக்கும் போட்டிகள் நாளை முதல் வரும் 22ம் தேதி வரை பீகார் மாநிலம் புத்த கயாவில் நடக்க உள்ளது. இந்த போட்டியில்  வேலூர் சத்துவாச்சாரி பளு தூக்கும் பயிற்சி மைய வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

Advertising
Advertising

ஆண்கள் பிரிவில் பி.பாலாஜி, கே.ஆர்.லோகேஷ், டி.மாதவன், எஸ்.விக்னேஷ், ஏ.தினேஷ், ஆர்.ஜெயகரன், வி.அருள்பாண்டியன், என்.ஜமாலுதீன், எஸ்.லோக்சந்த், வி.தமிழ்செல்வம், ஆர்.ராம்குமார் ஆகியோரும், பெண்கள் பிரிவில் ஏ.போஷிகா, இ.பிரியங்கா, வி.ரித்திகா, என்.கார்த்திகா, ஒய்.பூர்ணாஸ்ரீ, பி.தேவதர்ஷினி, எம்.லேக்கமால்யா, ஏ.மோகனபிரியா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். முன்னதாக பளு தூக்கும் வீரர், வீராங்கனைகள் வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பின்போது, டிஆர்ஓ பார்த்திபன், பளு தூக்கும் பயிற்சி மைய மேலாளர் ஐ.ஆர்.நோயலின்ஜான், பயிற்றுநர்கள் எல்.விநாயகமூர்த்தி, கவிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: