அமெரிக்காவில் மீண்டும் 4 பேர் சுட்டுக்கொலை

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புருக்ளின் பகுதியில் உள்ளது தனியார் கிளப். இங்கிருந்து நேற்று காலை 7 மணியளவில் நியூயார்க் நகர போலீசாருக்கு தொலைேபசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் காலை 6.55க்கு நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் கிளப்பில் இருந்த 4 பேர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாகவும், 3 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் கிடைத்தது. போலீசார் விசாரணையில் கிளப்பில் புகுந்த மர்ம நபர்கள், சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு, இந்த சம்பவத்தை அரங்கேற்றியதாக தெரிய வந்துள்ளது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.அமெரிக்காவில் துப்பாக்கிச் கலாசாரம் வேகமாக பரவி வருகிறது. பொது இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகளவில் நடக்கின்றன.

Related Stories:

>