தி.நகரில் நெரிசலை பயன்படுத்தி செல்போன் திருடிய பெண் பிடிபட்டார்

சென்னை,: தி.நகரில் நேற்று கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண் ஒருவர், கடைக்கு வந்த நபரின் பைக்குள் கைவிட்டு, செல்போன், பணத்தை எடுக்க முயற்சி செய்துள்ளார்.  அவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

* கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகர் 1வது பிளாக்கை சேர்ந்தவர் செல்வி (40). இவரது கணவன் பல ஆண்டுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். ஒரு மகள், 2 மகன்களுடன் தனியாக வசித்து வந்த செல்வி, கடன் தொல்லை காரணமாக நேற்று முன்தினம் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். படுகாயமடைந்த அவருக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* செம்பியம், ராஜமங்கலம், கொளத்தூர், வில்லிவாக்கம் பகுதிகளில் உள்ள கடைகளில் தொடர்ச்சியாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பெரம்பூர் மங்களபுரத்தை சேர்ந்த சுபாஷ் (21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

* ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையை சேர்ந்த முகமது ரபீக் (26) என்பவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட திருவல்லிக்கேணி நீலம்பாஷா தர்கா தெருவை சேர்ந்த தஸ்தகீர் (24), டெல்லி, மேற்கு நிஜாமுதீன் தெருவை சேர்ந்த முகமது நதீம் (20) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: