×

மலிவு விலையில் மகத்தான கார்

பிரெஞ்ச் நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான ரெனோ, அதன் அனைத்து புதுப்பிக்கப்பட்ட க்விட் ஹேட்ச்பேக் ரக காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே, இந்த காரின் சிறப்பம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் அண்மையில் ஸ்பை படங்கள் வெளியாகின. அவை, ஹேட்ச்பேக் ரக கார் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆவலை தூண்டியுள்ளது.  இந்நிலையில், இந்த கார், கடந்த அக்டோபர் 1ம்தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது, இந்தியர்கள் மத்தியில் நிலவி வந்த ஆவலை சற்று தணிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதேசமயம், தற்போது புதிய தூண்டுதலை இந்த காரின் அறிமுகம் ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், புதிய ஹேட்ச்பேக் ரக க்விட் கார் மிக மலிவான விலையில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார், பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக  உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காருக்கு, எஸ்யூவி ரக கார்களின் டிசைன்  தாத்பரியங்களை மையமாக கொண்டு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. காரின் முகப்பு பகுதி மின்விளக்குகள் சற்று தாழ்வாக நிறுவப்பட்டுள்ளது. மேலும், மேல்பக்கத்தில் முதல் தரத்திலான சில்வர் ஸ்ட்ரீக் எல்இடி பகல்நேர மின் விளக்கு இணைக்கப்பட்டுள்ளது. இது, க்விட் காருக்கு விலை உயர்ந்த சொகுசு காரின் லுக்கை வழங்குகிறது. காரின் பின்பக்கத்தில் நிறுவப்பட்டுள்ள மின்விளக்குகளும் அசத்தலான தோற்றத்தில் காட்சியளிக்கிறது. இவை, முன் எப்போதும் க்விட் காரில் இடம்பெறாத வசதிகள் ஆகும்.

இதுமட்டுமின்றி, க்விட் காரின் வெளிப்புற தோற்றத்தை கூடுதல் ரம்மியமாக காட்சிப்படுத்தும் வகையில், அதன் உடல்பகுதிக்கு கட்டுமஸ்தான அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அதனை ஹைலைட் செய்து காட்டும் வகையில் அவற்றிற்கு வால்கனோ க்ரே எனப்படும் நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், பல ஸ்போக்குகள் கொண்ட வீல், எஸ்யூவி கார்களில் இடம்பெறுவது போன்ற பிளேட் மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளிட்டவை சிறப்பாக வழங்கப்பட்டுள்ளன. வெளிப்புறத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இதேபோன்ற பல்வேறு மாற்றங்கள் அதன் உட்புறத்திலும் செய்யப்பட்டுள்ளன. காரின் கேபினுக்குள் புத்தம் புதிய எல்இடி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ப்ளூர் கன்சோல் மவுண்டட் ஏஎம்டி டயல் மற்றும் 20.32 மீடியா என்ஏவி டச் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இவை, காருக்கு கூடுதல் பிரீமியம் லுக்கை வழங்குகிறது. புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த ரெனோ க்விட் கார், தற்போது விற்பனையில் இருக்கும் க்விட் காரைப்போலவே இரு விதமான இன்ஜின் தேர்வில் விற்பனைக்கு கிடைக்கிறது. அந்த வகையில், 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் எஸ்சிஇ (SCe) மோட்டாரில் கிடைக்கிறது.

இவை இரண்டும் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கிறது. இதில், 0.8 லிட்டர் அளவுடைய இன்ஜின் அதிகபட்சமாக 54 பிஎஸ் சக்தியையும், 72 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இதேபோன்று, 1.0 லிட்டரில் கிடைக்கும் இன்ஜின் அதிபட்சமாக 68 பிஎஸ் பவரையும், 91 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. புதிய க்விட் காரின் ஆரம்பநிலை  மாடலுக்கு 2,83,290 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் ஹை  எண்ட் மாடலுக்கு 4,84,490 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.


Tags : Massive car , affordable price
× RELATED ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னை...