குர்து போராளி குழுக்கள் மீது துருக்கி தொடர் தாக்குதல்: துருக்கி-சிரியா எல்லையில் பல லட்சம் மக்கள் தவிப்பு

டமாஸ்கஸ்: குர்து படையினர்  கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு சிரியா மீது துருக்கி ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பல லட்சம் மக்கள் பாதுகாப்பற்ற நிலையை எதிர்கொண்டுள்ளனர். குர்து போராளி குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு சிரியா மீது கடந்த ஒரு வாரமாக துருக்கி ராணுவம் எல்லை தாண்டி தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு குர்து படையினரும் பதிலடி கொடுத்து வருவதால் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. துருக்கி தாக்குதல் காரணமாக இரு நாடுகளின் எல்லையில் 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் பல லட்சம் பேர் பாதுகாப்பற்ற சூழலை எதிர்கொண்டுள்ளனர்.

வடக்கு சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் திரும்ப பெறப்பட்டதை அடுத்து துருக்கி தாக்குதலை தொடங்கியது. ஐ.எஸ்.பயங்கரவாதிகளை ஒழிக்க அமெரிக்க படையுடன் இணைந்து செயல்பட்ட குர்து போராளிகளை அமேரிக்கா முதுகில் குத்திவிட்டதாக பல தரப்பினரும் புகார் தெரிவித்தனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அமெரிக்கா வடக்கு சிரியாவில் மீண்டும் தங்களது படைகளை பாதுகாப்பு பணியில் நிறுத்தியுள்ளது.

Related Stories: