பாலஸ்தீன நாட்டில் பாமாயில் எடுக்கப்படும் பனை மரத்தின் கழிவுகளை பயன்படுத்தி காகிதங்களை உருவாக்கும் ஆலை

பாலஸ்தீன்: பாலஸ்தீனத்தில், பாமாயில் எடுக்கப்படும் பனை மரத்தின் கழிவுகளை பயன்படுத்தி அங்குள்ள தொழிற்சாலை ஒன்று காகிதங்களை உருவாக்கி வருகிறது பாலஸ்தீன நாட்டில் சுமார் 5000க்கு மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு நிலங்களில் பாமாயில் எண்ணெய் எடுக்கப்படும் பனை மரங்களை நட்டு மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த பனை மரங்களிலிருந்து அகற்றப்படும் காய்ந்த ஓலைகள் உள்ளிட்ட கழிவுகளை விவசாயிகள் திறந்த வெளியில் எரித்து வருவதால், சுவாசக் கோளாறு உள்ளிட்ட நோய் பாதிப்பு ஏற்படுவதுடன், சுற்றுச்சூழலும் சீர்கேடும் அடைகிறது.

இந்தநிலையை போக்க, கடந்த ஆண்டு முதல் ஜெரிக்கோ நகரில், பனை கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் விவசாயிகள் கொண்டு வரும் பனை கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டு, அவை கழிவறைக்கு பயன்படுத்தும் காகிதங்களாக உருவாக்கப்படுகிறது. அரசின் நிதி உதவியை பெற்று இயங்கும் இந்த ஆலை, நாளொன்றுக்கு சுமார் 8 டன் அளவுக்கு கழிவறை  பாமாயில் தயார் செய்து, அவற்றை உள்ளூர் சந்தைகளில் விற்பனை செய்து வருகிறது. விரைவில் இந்த நிறுவனம் பனை கழிவுகளை பயன்படுத்தி நோட்டு புத்தகங்களையும் தயார் செய்ய திட்டமிட்டுள்ளது.

Related Stories:

>