சில்லி பாயின்ட்...

* விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரின் சி பிரிவில் தொடர்ச்சியாக 7 வெற்றிகளைக் குவித்து முன்னிலை வகிக்கும் தமிழக அணி, தனது 8வது லீக் ஆட்டத்தில் இன்று மத்தியப்பிரதேச அணியை சந்திக்கிறது. இப்போட்டி ஜெய்பூரில் காலை 9.00 மணிக்கு தொடங்குகிறது.

* அனைத்து மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் கூட்டம் மும்பையில் நாளை நடைபெறுகிறது. புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிர்வாகிகள் அக். 23ல் நடைபெற உள்ள வருடாந்திர பொதுக் குழு கூட்டத்துக்குப் பின்னர் பொறுப்பேற்றுக் கொள்வர்.
Advertising
Advertising

* உலக பில்லியர்ட்ஸ் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட நடப்பு சாம்பியன் சவுரவ் கோத்தாரி தகுதி பெற்றார். அரை இறுதியில் இங்கிலாந்தின் மைக் ரஸ்ஸலுடன் மோதிய அவர் 1090-594 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்றார்.

* ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ் 6-3, 6-7 (7-9), 6-3 என்ற செட் கணக்கில் சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரரை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார்.

* கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக இந்திய அணி முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: