மகளிர் கிரிக்கெட் ஒருநாள் தொடரை வென்றது இந்தியா

வதோதரா: தென் ஆப்ரிக்க மகளிர் கிரிக்கெட் அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இந்தியா - தென் ஆப்ரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகளிடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி நேற்று நடைபெற்றது. வதோதரா, ரிலையன்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்தியா முதலில் பந்துவீசியது. தென் ஆப்ரிக்கா 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 247 ரன் குவித்தது. லிஸெல் லீ 40, வுல்வார்ட் 69, த்ரிஷா 22, டு பிரீஸ் 44, குட்ஆல் 38 ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் ஷிகா பாண்டே, ஏக்தா பிஷ்ட், பூனம் யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

Advertising
Advertising

அடுத்து களமிறங்கிய இந்திய அணி 48 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன் எடுத்து வென்றது. பிரியா பூனியா 20, ஜெமிமா ரோட்ரிகியூஸ் 18,  பூனம் ராவுத் 65, கேப்டன் மித்தாலி ராஜ் 66, தீப்தி 2 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். ஹர்மான்பிரீத் கவுர் 39 ரன், டானியா பாட்டியா 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பூனம் ராவுத் சிறந்த வீராங்கனை விருது பெற்றார். இந்தியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிய நிலையில், 2வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வதோதராவில் நாளை மறுநாள் காலை 9.00 மணிக்கு தொடங்குகிறது.

Related Stories: