தொடர்ந்து 2வது மாதமாக இடிஎப் முதலீடு அதிகரிப்பு

மும்பை: தங்க இடிஎப்களில் முதலீடு செய்வது தொடர்ந்து 2வது மாதமாக செப்டம்பரிலும் அதிகரித்துள்ளது. பங்குச்சந்தையில் இடிஎப்கள் மூலம் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். ஆனால் இந்தியாவில் தங்க இடிஎப் முதலீடுகளில் அதிக வரவேற்பு இல்லை. கடந்த ஆண்டு நவம்பரில் தங்க இடிஎப்களில் 10 கோடி மட்டுமே முதலீடு செய்யப்பட்டது. அதன்பிறகு முதல் முறையாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தங்க இடிஎப் முதலீடு 145 ஆக உயர்ந்தது. இந்நிலையில் மியூச்சுவல் பண்ட் முதலீட்டு நிறுவனங்கள் வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி, தங்க இடிஎப் பத்திரங்களில் கடந்த செப்டம்பர் மாதத்தில் ₹44 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டு செப்டம்பரில் தங்க இடிஎப்களில் இருந்து 34 கோடி வெளியேற்றப்பட்டது. சர்வதேச சந்தையில் மந்த நிலை, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் கடும் சரிவு, பங்குச்சந்தைகளில் ஸ்திரமற்ற நிலை போன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்க இடிஎப்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியுள்ளனர் என சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

Related Stories: