டாக்டரிடம் வழிப்பறி 4 பேர் கைது

கீழ்ப்பாக்கம்: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வரும் ரித்து (23), நேற்று முன்தினம் இரவு கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் சென்றபோது, 2 பைக்குகளில் வந்த 4 பேர், அவரை வழிமறித்து, கைப்பையில்  இருந்த 10 ஆயிரம், 50 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டுகளை பறித்துக்கொண்டு தப்பினர். போலீசார்  விசாரணையில், அயனாவரம் புது தெருவை சேர்ந்த அஜய் (20), சபாபதி தெருவை சேர்ந்த ஹரிஷ்குமார் (18), சோலை  தெருவை சேர்ந்த வாலி (எ) அஜித்குமார் (22), சூளைமேடு பஜனை கோயில் தெருவை சேர்ந்த சிவா (20) ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்தனர்.

Related Stories: