ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 256 சரிவு : நகை வாங்குவோர் மகிழ்ச்சி

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 256 குறைந்து ரூ.29,104க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.32 குறைந்து ரூ.3,638 க்கு விற்பனையாகிறது. அதே நேரம் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.49க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertising
Advertising

செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது.கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை ஆனது. பின் ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டியது. செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டியும் குறைந்தும் மாற்றம் நிலவி வந்தது. இதனிடையே அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் போர் முடிவுக்கு வரும் சாதகமான சூழல் உள்ளதால் இந்த மாதத்தில் தங்கம் விலை சரிந்து வருகிறது.

இறங்குமுகத்தில் தங்கம் விலை

இதன் எதிரொலியாக சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 256 குறைந்து ரூ.29,104க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.32 குறைந்து ரூ.3,638க்கு விற்பனையாகிறது. அதே நேரம் வெள்ளி விலை கிராமுக்கு 90 காசுகள் குறைந்து ரூ.49க்கும், கிலோ ரூ.49,000க்கும் விற்பனையாகி வந்தது . கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை மீண்டும் 29 ஆயிரத்தை தாண்டியுள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: