சீன அதிபர் வருகையின் போது கிண்டி, வேளச்சேரி வழிதடத்தில் ரயில்கள் நிறுத்தப்படும் : தெற்கு ரயில்வே

சென்னை: வேளச்சேரி - கடற்கரை செல்லும் பறக்கும் ரயில்களும் தேவைப்பட்டால் சிறிது நேரம் நிறுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சீன அதிபர் இன்று சென்னை வரும்போது, தேவைப்பட்டால் கிண்டி வழித்தடத்தில் சிறிதுநேரம் ரயில்கள் நிறுத்தப்படும் என்றும், புறநகர், விரைவு ரயில்களை பல்லாவரம் பகுதியில் சிறிது நேரம் நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், சீன அதிபர் ஜின்பிங் இன்று மதியம் 1.30 மணிக்கு தனி விமானத்தில் சென்னை வருகிறார்.

முன்னதாக இன்று மதியம் 12.30 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி  சென்னைவருகிறார். மோடி, கோவளத்தில் உள்ள ஓட்டலிலும், சீன அதிபர் ஜின்பிங், கிண்டியில் உள்ள கிராண்ட் சோழா ஓட்டலிலும் தங்குகின்றனர். இரு நாட்டு தலைவர்களும் இன்றும், நாளையும் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில்  சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.

இன்று மதியம் சென்னை வரும் சீன அதிபர் விமான நிலையத்தில் இருந்து நேராக கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலுக்கு சென்று தங்குகிறார். பின்னர் மாலை 4 மணிக்கு ஓட்டலில் இருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக  மாமல்லபுரம் செல்கிறார். முன்னதாக இன்று மதியம் 12.30 மணிக்கு சென்னை வரும் பிரதமர் மோடி, விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் சென்று கோவளம் கடற்கரை அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்.

மாலை 4.55 மணிக்கு மாமல்லபுரம் வந்தடையும் சீன அதிபர் ஜின்பிங்கை பிரதமர் மோடி வரவேற்கிறார். மோடி - ஜி ஜின் பிங் வருகையையொட்டி பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே வேளச்சேரி - கடற்கரை செல்லும் பறக்கும் ரயில்களும் தேவைப்பட்டால் சிறிது நேரம் நிறுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சீன அதிபர் இன்று சென்னை வரும்போது, புறநகர், விரைவு ரயில்களை பல்லாவரம் பகுதியில் சிறிது நேரம் நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: