கேரளாவில் திருட்டை தடுக்க அதிநவீன தொழில்நுட்பம்

திருவனந்தபுரம்: கேரளாவில்  திருட்டு  மற்றும் கொள்ைள சம்பவங்களை தடுக்க மலேசியா  மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் மட்டுமே நடைமுறையில் உள்ள சென்ட்ரல்  இன்ட்ரூஷன் மானிட்டரிங்  சிஸ்டம் (சிஐஎம்எஸ்) என்ற அதிநவீன  தொழில்நுட்பம்   கேரளாவில் கொண்டு வரப்படுகிறது. நகைக்கடைகள்,  வங்கிகள், வீடுகளில் இந்த  கருவியை பொருத்தி கொள்ளலாம். இது நேரடியாக போலீஸ்  கட்டுப்பாட்டு  அறையுடன் இணைக்கப்படும். இந்த கருவி உள்ள இடத்தில்  கொள்ளை நடந்தால் 3 முதல்  7 விநாடிகளில்  வீடியோவுடன் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்றுவிடும்.  இதனால் உடனடியாக  திருடர்களை  பிடித்து விட முடியும். அடுத்தமாதம் இது அறிமுகப் படுத்தப்படுகிறது.

Related Stories: