ஷாங்காய் மாஸ்டர் டென்னிஸ் காலிறுதியில் ஜோகோவிச்

ஷாங்காய்: ஷாங்காய் மாஸ்டர் டென்னிஸ் காலிறுதிச்சுற்றுக்கு செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் தகுதி பெற்றார். சீனாவின் ஷாங்காய் நகரில் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. முதல் சுற்று முடிவடைந்த  நிலையில் காலிறுதிக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நேற்று நடந்தன. இதில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் ஜான் இஸ்னரை எதிர்கொண்டு விளையாடினார். மொத்தம் 74 நிமிடங்கள் நடந்த  இப்போட்டியில் நோவக் ஜோகோவிச் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் எளிதாக வென்று காலிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இவர் காலிறுதிப்போட்டியில் கிரீக் வீரர் ஸ்டெபனாஸ் சிட்சிபஸ் அல்லது போலந்தின் ஹூபர்ட் ஹர்கேக்சை எதிர்த்து  விளையாடுவார்.

Advertising
Advertising

மற்றொரு போட்டியில் இத்தாலியின் மேட்டியூ பெரிட்டனி 7-6, 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் ஸ்பெயின் வீரர் பாடிஸ்டா அகட்டை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு போட்டியில் இத்தாலியின் பேபியோ பாக்னினி 6-3, 7-4 என்ற  செட் கணக்கில் ரஷ்யாவின் கேரன் கச்சனோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் ரஷ்யாவின்  டேனி மெட்வடேவ் 7-6, 7-5 என்ற செட் கணக்கில் கனடாவின் வேசக் பாஸ்பிஸியை வீழ்த்தி காலிறுதியில்  நுழைந்தார்.

Related Stories: