இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கடன் வட்டி குறைப்பு

சென்னை: வீடு, வாகன கடன்களுக்கான வட்டியை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி குறைத்துள்ளது.  ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை கால் சதவீதம் குறைத்து அறிவித்தது. ரெப்போ வட்டியை அடிப்படையாக கொண்டு, இதன் பலனை  வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வீடு, வாகனம், கல்விக்கடன், குறு, சிறு நிறுவனங்களுக்கான கடன்கள் உள்ளிட்டவற்றுக்கு வட்டியை 8.25 சதவீதத்தில் இருந்து கால் சதவீதம் குறைத்து 8 சதவீதமாக  நிர்ணயித்துள்ளது.  இது அடுத்த மாதம் 1ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.  முன்னதாக, இந்த வங்கி ரெப்போ வட்டி அடிப்படையில், சில்லரை கடன்கள், குறு சிறு நிறுவன கடன்களுக்கு வட்டி விகிதம் நிர்ணயம் செய்யும்  நடைமுறையை கடந்த 1ம் தேதி முதல் அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

Related Stories: