மார்த்தாண்டத்தில் 2 குழந்தைகளுடன் மாயம்: கள்ளக்காதல் ஜோடியை மடக்கிய போலீசார்...காவல் நிலையத்தில் இளம்பெண் கதறல்

மார்த்தாண்டம்: மார்த்தாண்டத்தில் 2 குழந்தைகளுடன் மாயமான கள்ளக்காதல் ஜோடியை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்து வருகின்றனர்.மார்த்தாண்டம் மாமூட்டுக்கடை பகுதியை சேர்ந்தவர் அனிஷ் (32, பெயர் மாற்றம்). கொத்தனார். இவரது மனைவி செல்வி (27, பெயர் மாற்றம்). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களின் வீடு அருகே வசிப்பவர் சுரேஷ்குமார் (26  பெயர் மாற்றம்). கட்டிட வேலை செய்து வருகிறார். வேலைக்கு செல்லும் இடத்தில் அனிசுக்கும்-சுரேஷ்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் அடிக்கடி அனிஷின் வீட்டுக்கு சென்று வந்தார். இதனால் அனிஷின் மனைவி மற்றும் குழந்தைகளுடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது.
Advertising
Advertising

அனிஷ் வீட்டில் இல்லாத நேரங்களிலும் சுரேஷ்குமார் அவரது வீட்டுக்கு  அடிக்கடி சென்று வந்தார். அப்போது தனிமையில் இருக்கும் செல்வியுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பாராம். இது தனிமையில் இருந்த செல்விக்கு பெரும் ஆறுதலாக இருந்தது. இவர்களது பேச்சு பல நாட்கள் மணிக் கணக்கில் நீடிக்க  தொடங்கியது. ஒரு கட்டத்தில் இந்த பேச்சு இருவருக்கும் இடையே கடும் நெருக்கத்தையும் ஏற்படுத்தியது. நாளடைவில் கள்ளக்காதலாகவும் மாறியது. கணவன் வெளியே சென்ற பிறகு செல்வியும், சுரேஷ்குமாருக்கும் உல்லாசமாக இருக்க தொடங்கினர். இதற்கிடையே அனிஷ் இல்லாத நேரங்களில் சுரேஷ்குமார் அவரது வீட்டில் அதிக நேரம் செலவிட்டது அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து அவர்கள் கள்ளக்காதல் ஜோடியின் நடவடிக்கைகளை  கண்காணிக்க தொடங்கினர். இதை கள்ளக்காதலர்களும் புரிந்து கொண்டனர். இதனால் தங்களது உல்லாசத்துக்கு வேறு இடத்தை தேட தொடங்கினர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வி தனது 2 குழந்தைகளுடன் திடீரென மாயமானார். அனிஷ் வேலை முடிந்து திரும்பியபோது வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் இல்லாததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக  அவர் உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களிலும் தேடி பார்த்தார். பலமணிநேரம், பல நாட்கள் என்று தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.  இதற்கிடையே அக்கம் பக்கம் விசாரித்த போது சுரேஷ்குமார் அடிக்கடி வந்து செல்வது தெரியவந்தது. குறிப்பாக செல்வி தனியாக இருக்கும் போது சுரேஷ்குமார் வந்து செல்வதையும் அனிஷ் தெரிந்து கொண்டார்.

இந்த நிலையில் சுரேஷ்குமாரும் மாயமாகி இருப்பது அனிஷ்க்கு தெரியவந்தது. நண்பனாக நெருங்கி பழகி வந்தவன் துரோகம் செய்து விட்டானே என்று கண்கலங்கினார். பின்னர் வேறு வழியில்லாமல் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரில் சுரேஷ்குமார் தனது மனைவி மற்றும் குழந்தைகளை கடத்தி சென்று விட்டதார். ஆகவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று கூறி இருந்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் இருவரையும் அந்த பகுதியில் சல்லடை போட்டு தேடி வந்தனர். ஆனால் கள்ளக்காதலர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. இந்த நிலையில் கள்ளக்காதலர்கள் 2 குழந்தைகளுடன் ராஜாக்கமங்கலம் பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து உல்லாசமாக வாழ்ந்து வருவது தெரியவந்தது.

 இதையடுத்து நேற்று சப்-இன்ஸ்பெக்டர் வினிஷ்பாபு தலைமையில் போலீசார்  சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் வாடகை வீட்டில் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்த கள்ளக்காதல் ேஜாடியை மடக்கி பிடித்தனர்.அதைத் தொடர்ந்து இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து கள்ளக்காதலர்களின் பெற்றோரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது செல்வி, தனக்கு அனிஷ் வேண்டாம். கள்ளக்காதலன் சுரேஷ்குமார்  தான் வேண்டும். குழந்தைகளையும் தர மாட்டேன் என்று அடம் பிடித்தார். காவல் நிலையத்தில் தாலி கட்டிய கணவன் நிற்க, கள்ளக்காதலனுக்காக கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

அப்போது காவல் நிலையத்தில் நின்று கொண்டிருந்த  சுரேஷ்குமார், கள்ளக்காதலியின் குழந்தைகளை தனது குழந்தைகள் போல் கொஞ்சிக்கொண்டிருந்தார். போலீசார் செல்வியை அழைத்து பேசினர். என்ன இருந்தாலும் குழந்தைகளுக்கு அனிஷ்தான் தந்தை. அவரால் தான் குழந்தைகளை நன்றாக  வளர்க்க முடியும். கள்ளக்காதலன் மோகம் தீர்ந்ததும் குழந்தைகளை கொடுமைப்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே குழந்தைகளின் நலனுக்காக கணவருடன் சேர்ந்து வாழ்வது தான் சரியானதாக இருக்கும் என்று அறிவுரை வழங்கினர். போலீசாரின் அறிவுரைகளை செல்வி ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு சுனில்குமாரை எச்சரித்து எழுதி வாங்கி  கொண்டு பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் நேற்று மார்த்தாண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: