வங்கி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை மத்திய அரசு சட்டப்படி நிர்ணயம் செய்யக் கோரி வழக்கு

மதுரை: மத்திய அரசின் கீழ் இயங்கும் வங்கி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை மத்திய அரசு சட்டப்படி நிர்ணயம் செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த பவுன்ராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். வங்கி ஊழியர்களுக்கான ஊதியத்தை மத்திய நிதி அமைச்சகமே முடிவு செய்ய வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வங்கி ஊழியர் கூட்டமைப்பு நடத்தும் பேச்சுவார்த்தையின் முடிவு நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டது என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

Advertising
Advertising

Related Stories: