உலக மனநல தினத்தையொட்டி விழிப்புணர்வு : மனநோயாளிகள் 20 பேருக்கு மெட்ரோ ரயில் பயணம்

சென்னை : சென்னையில் கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மெட்ரோ ரயிலில் அழைத்துச் செல்லப்பட்டனர். உடலில் ஏற்படும் நோய்களை கூட மருத்துவத்தில் குணப்படுத்தலாம். அல்லது நோயின் வீரியத்தை குறைக்கலாம். ஆனால், மனநல பிரச்னைகள் நாளடைவில் நமது அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும். அதற்கு தீர்வாக உருவானதே உலக மனநல தினம். இது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 1992ம் ஆண்டு உலக மனநல கூட்டமைப்பு இந்த தினத்தை அறிமுகப்படுத்தியது.

உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரப்படி உலக அளவில் 45 கோடி மக்கள் மனநல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், உலக மனநல தினத்தையொட்டி, நோயாளிகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக கீழ்ப்பாக்கத்தில் இருந்து 20 நோயாளிகள் விமான நிலையம் வரை மெட்ரோ ரயிலில் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்து மீண்டும் கீழ்ப்பாக்கத்திற்கு மெட்ரோ ரயிலிலேயே அழைத்து வரப்பட்டனர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலும் உலக மனநல வாரத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்று மனநல மேம்பாடு மற்றும் தற்கோளை தடுப்புகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். 

Related Stories: