×

அன்புமணிக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கேட்கவில்லை : டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பின் பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு

டெல்லி : டெல்லியில் பிரதமர் மோடி சந்திக்க பாமக நிறுவனர் ராமதாஸ் மத்திய அமைச்சரவையில் தனது மகன் அன்புமணிக்கு பிரதிநிதித்துவம் கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அழைப்பின் பேரில் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் ராமதாஸ் சந்தித்து பேசினார். 20 நிமிடம் சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டின் நலனுக்காக காவேரி, கோதாவரி இணைப்பு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தியதாக குறிப்பிட்டார். அன்புமணிக்கு மத்திய அமைச்சரவையில் இடம் பெற பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டதா என்ற கேள்விக்கு பதில் அளித்த ராமதாஸ், அப்படி ஏதும் இல்லை என்றார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக 7 சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும், காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமரிடம் வலியுறுத்தியதாகவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதனிடையே இந்திய - சீன உறவுகளை வலுப்படுத்துவது குறித்து சீன அதிபர் ஷி ஜின்பிங் - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இடையிலான பேச்சுவார்த்தை நாளையும், நாளை மறுநாளும் வரலாற்று சிறப்பு மிக்க மாமல்லபுரத்தில் நடைபெறுவதை சுட்டிக்காட்டிய அவர், இதனால் தமிழக மக்கள் பெருமையடைவதாகவும், இதற்காக தமிழக மக்களின் சார்பில்  நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Ramadas ,Delhi Ramadas ,Cabinet ,Delhi Anbumani ,Bamaka ,Modi , Prime Minister Modi, Ramadas, Bamaka, Anbumani, Delhi, the Great
× RELATED மக்கள் அலட்சியத்தை கைவிட்டால்...