×

கர்நாடக மாநிலத்தில் 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை: 6 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நீடிப்பு

பெங்களூரு: கர்நாடகாவின் முன்னாள் துணை முதல்வர் ஜி பரமேஸ்வரவுக்கு சொந்தமான 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களை குறிவைத்து இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடகா மாநிலத்தில் பெங்களூரு, தும்பூர்பல, சிக்மங்களூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வீடுகள், கல்லூரிகளில் தற்போது இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. முன்னாள் துணை முதல்வராக இருந்த ஜி.கே.பரமேஸ்வர், இவர் பதவியில் இருந்த போது தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி பல கல்லூரிகளுக்கு சலுகைகள் வழங்கியதாக பாஜகவினர் குற்றம் சாட்டி வந்தனர்.

இதற்கு ஜி.கே.பரமேஸ்வர் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்நிலையில் அவருடைய உறவினர்கள் வீடுகளிலும், கல்லூரிகளிலும், தற்போது இந்த அதிரடி சோதனையானது நடைபெற்று வருகிறது. தும்கூருவில் உள்ள கல்லூரியில் கடந்த 6 மணி நேரமாக 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மற்றும் அந்த கல்லூரியின் நிர்வாகிகள் வீடுகளிலும் சோதனையானது நடைபெற்று வருகிறது. இதனிடையே மறுபுறம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆர்.எல்.ஜாலப்பா அவர்களின் தும்கூருவில் உள்ள மருத்துவமனை உள்ளிட்ட 13 இடங்களில் சோதனையானது நடைபெறுகிறது. இந்த சோதனையின் போது பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

2 தலைவர்களுடைய உறவினர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் என 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையானது நடைபெற்று வருகிறது. சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக 100-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர், இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த சோதனையானது இன்று மாலை வரை நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Income Tax Officers ,Karnataka ,places , Karnataka, Income Tax Department, Trial
× RELATED சேரும் இடத்திற்கு உத்தரவாதம்...