உலகின் முதல் தேசிய பூங்கா

நன்றி குங்குமம் முத்தாரம்

அமெரிக்காவின் வயோமிங் மாகாணத்தில் குடிகொண்டிருக்கிறது யெல்லோஸ்டோன் தேசிய பூங்கா. அமெரிக்காவின் முதல் தேசிய பூங்கா இதுதான். உலகின் முதல் தேசிய பூங்காவும் இதுதான் என்று சொல்கிறார்கள்.  மார்ச் 1, 1872-ம் வருடம் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பூங்கா 22 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துகிடக்கிறது.

நதிகள், ஏரிகள், பள்ளத்தாக்குகள், பறவைகள், விலங்குகள் என இயற்கையின் அழகுப் பொக்கிஷமாக விளங்குகிறது இந்தப் பூங்கா. கடந்த வருடம் பூங்காவைச் சுற்றிப்பார்க்க 41 லட்சம் பேர் வருகை புரிந்திருக்கின்றனர். யுனெஸ்கோவின் பாரம்பரிய நினைவுச்சின்னத்திலும் இடம்பிடித்துவிட்டது யெல்லோஸ்டோன்.

Related Stories: