இந்தியாவில் உற்பத்தி ஆலைகள் அமைக்க பிரான்ஸ் ராணுவ தயாரிப்பு நிறுவனங்களுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் அழைப்பு

பிரான்ஸ்: பிரான்ஸ் சென்றுள்ள ராஜ்நாத் சிங்,  அந்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களின் அதிபர்களை  சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்தியாவில் உற்பத்தி ஆலைகள் அமைத்து ராணுவ தளவாடங்களை தயாரிக்குமாறும், அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.இதேபோல் பிரான்ஸ் நிறுவனங்கள் சார்பிலும் பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

இந்தியாவில் எளிதாக தொழில் செய்யும் வண்ணம் சிறப்பான வணிக சூழலை உருவாக்குமாறு பிரான்ஸ் நிறுவனங்கள் கேட்டுக் கொண்டன. வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை அளிக்கும் வகையில் பராமரிப்பு மற்றும் பழுது பார்ப்பு தளங்களை இந்தியாவில் நிறுவ ஆர்வமாக உள்ளதாகவும், எனவே வரி விதிப்பு போன்ற வணிகத் தடைகள் இல்லாத சூழலை உருவாக்க வேண்டும்  என்றும் சஃப்ரான் ஏர்கிராஃப்ட் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதைக் கேட்ட அமைச்சர் ராஜ்நாத் சிங், மோடி தலைமையிலான அரசு, இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழலை உருவாக்குவதற்காக சீரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார். உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி முனையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் எடுத்துரைத்தார்.

Related Stories:

>