சென்னையில் பட்டப்பகலில் வெடிகுண்டு வீசி பெண்ணை கொல்ல முயற்சி: காரணங்கள் குறித்து போலீசார் விசாரணை

சென்னை: சென்னையில் இன்று பட்டப்பகலில் பெண் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் ரிச்சி தெரு உள்ளது. மிகவும் பரபரப்பாக காணப்படும் இந்த பகுதியில் இன்று மதியம் ஒரு பெண்ணை சிலர் திடீரென சுற்றி வளைத்து தாக்கினர். இந்நிலையில் அரிவாளால் அந்த பெண்ணை வெட்டியதுடன், நாட்டு வெடிகுண்டையும் அவர் மீது வீசினர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. பட்டப்பகலில் நடந்த இந்த கொலைவெறித் தாக்குதலால் அங்கு திடீர் பதற்றம் ஏற்பட்டது. இதுபற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Advertising
Advertising

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில்ண அந்தப் பெண் அப்பகுதியைச் சேர்ந்த ரவுடி ஒருவரின் மூன்றாவது மனைவி என்பதும், அவரை 6 பேர் கொண்ட கும்பல் கொல்ல முயன்றதும் தெரியவந்தது. மேலும் தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவத்தை தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சீன அதிபர் - பிரதமர் மோடி நாளை சென்னை வரவுள்ள நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: