×

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக ராகுல்காந்தி மீது சூரத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு: டிச.10-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

குஜராத்: மோடி குறித்து அவதூறாக பேசியதாக ராகுல்காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் டிசம்பர் 10-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது. நடந்து முடிந்த மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது, காங்., முன்னாள் தலைவர், ராகுல் நாட்டின் காவலாளி என தன்னை கூறி வருகிறார் மோடி. ஆனால் அனைத்து திருடர்களின் பெயர்களும் மோடி என்று எப்படி உள்ளது என கூறியிருந்தார். இதுதொடர்பாக குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டில் அவர் மீது பா.ஜனதா எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில் நேரில் ஆஜராக கோரி சம்மன் அனுப்பிவைக்கப்பட்டது. இருந்தும் ராகுல் ஆஜராகவில்லை. இந்நிலையில் இன்று நேரில் ஆஜராக ராகுலுக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து ராகுல் இன்று சூரத் கோர்ட்டில் நேரில் ஆஜரானார். அப்போது, தான் நேரில் ஆஜராவதில் இருந்து நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும் என ராகுல் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ராகுலின் மனு மீது பதிலளிக்க மனுதாரருக்கு அவகாசம் அளித்து, இவ்வழக்கு விசாரணையை டிசம்பர் 10 ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே அமித்‌ஷாவை ‘‘கொலை குற்றம் சாட்டப்பட்டவர்’’ என்று பேசியதற்காக, ராகுல் காந்தி மீது குஜராத் மாநிலம் ஆமதாபாத் கோர்ட்டில் பா.ஜனதா கவுன்சிலர் தொடர்ந்த மற்றொரு அவதூறு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக, நாளை ராகுல் காந்தி கோர்ட்டில் ஆஜராக உள்ளார் எனவும் கூறப்படுகிறது.


Tags : Rahul Gandhi ,Palanisamy ,court ,Surat ,Modi Megadadu , PM Modi, Rahul Gandhi, Surat Court, adjourned
× RELATED நாட்டு மக்களுக்கு எம்.பி. ராகுல் காந்தி வேண்டுகோள்