காவிரியில் மேகதாது உள்ளிட்ட எந்த திட்டத்திற்கும் தமிழக அரசின் அனுமதியின்றி ஒப்புதல் கூடாது: முதல்வர் பழனிசாமி மத்திய அமைச்சர்களுக்கு கடிதம்

சென்னை: மேகதாது அணை தொடர்பான கர்நாடக அரசின் கோரிக்கை நிராகரிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். கர்நாடகாவின் கோரிக்கையை ஏற்று, மேகதாதுவில் அணை கட்டுவதற்கான வரைவு திட்டம் தயாரிப்பதற்கு மத்திய  சுற்றுச்சூழல் துறையும் அனுமதி  வழங்கியது. அதன்படி, வரைவு திட்டம் தயாரித்து சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கர்நாடகா சமர்ப்பித்துள்ளது. ஆனால், அணை கட்டுவதற்கானஅனுமதியை மட்டும் மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை.  கர்நாடகாவின் இந்த அணை திட்டத்துக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என மத்திய அரசிடமும் முறையிட்டுள்ளது. அதோடு, உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தது. பின்னர் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என்றும், இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் மத்திய சுற்றுசூழல் அமைச்சர்கத்திடம் கர்நாடகா சார்பில் கேட்கப்பட்டது. இந்நிலையில், மேகதாது அணை விவகாரத்தில், தமிழக அரசின் கருத்துகளை கேட்காமல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் வனத்துறை அமைச்சகம் கர்நாடகா அரசுக்கு அனுமதியளிக்கக்கூடாது என பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி  சார்பில் கடிதம் எழுதப்பட்டது. அதன் அடிப்படையில் மேகதாது அணை தொடர்பாக மத்திய அமைச்சர்கள் கஜேந்திர சிங் ஷெகாவத், பிரகாஷ் ஜவடேகருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். காவிரியில் தற்போது கட்டப்பட்டுள்ள அணைகளே நீரை தேக்கி வைக்க போதுமானவை என நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தற்போது காவிரியில் புதிதாக அணை கட்ட வேண்டும் என்ற கர்நாடகத்தின் கோரிக்கை ஏற்கத்தக்கது அல்ல. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கடா கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்க கூடாது. காவிரியில் மேகதாது உள்ளிட்ட எந்த திட்டத்திற்கும் தமிழக அரசின் அனுமதியின்றி ஒப்புதல் கூடாது. மேகதாது அணைக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: