×

காஷ்மீர் விவகாரம்: இரு நாடுகளும் அமைதியான பேச்சுவார்த்தை மூலம் சர்ச்சையை தீர்க்க வேண்டும் என சீனா கூறியதற்கு இந்தியா தரப்பில் பதில்

டெல்லி: காஷ்மீர் விவகாரத்தில் அமைதி பேச்சு மூலம் தீர்வு காண வேண்டும் என சீன அதிபர் ஜின்பிங் கூறியதற்கு இந்தியா தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து, அதை 2 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு சமீபத்தில் பிரித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான், இப்பிரச்னையை சர்வதேச அரங்கில் கிளப்ப முயற்சி மேற்கொண்டது. இதற்காக காஷ்மீர் விவகாரத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் எழுப்ப வேண்டும் என சீன வெளியுறவு அமைச்சர் வாங்கிடம், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மகமூத் குரேஷி சமீபத்தில் வேண்டுகோள் விடுத்தார். காஷ்மீர் விவகாரத்தில் நீதி கிடைக்க சீனா துணை நிற்கும் என குரேஷியிடம் வாங் தெரிவித்தார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சீனா சென்று அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார். அப்போது சீன அதிபர்  ஜின்பிங்  காஷ்மீரின் நிலைமையைக் கவனித்து வருவதாகவும், முக்கிய நலன்கள் தொடர்பான பிரச்சினைகளில் பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கப்படும்  என்று கூறியதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம், இந்த நிலைமையின்  சரியும் தவறும் தெளிவாக உள்ளதாக சீன அதிபர் கூறியதாகவும் அதில் தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் அமைதியான  பேச்சுவார்த்தை மூலம் சர்ச்சையை தீர்க்க வேண்டும் என்று கூறியதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சீன அதிபரின் இந்த கருத்திற்கு இந்தியா தரப்பில் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவிஷ் குமார் பதில் அளித்துள்ளார்.

அதில்; பாக்., பிரதமருடன் சந்திப்பின் போது, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சீன அதிபர் கூறிய கருத்து தொடர்பான அறிக்கையை கண்டோம். காஷ்மீர், இந்தியாவின் உள்ளார்ந்த பகுதி என்ற இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளது. எங்களின் நிலையை சீனாவும் புரிந்து கொண்டுள்ளது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் மற்ற நாடுகள் கருத்து கூறுவதை தவிர்ப்பது வேண்டும். காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாட்டின் தலையீட்டுக்கு இடமில்லை என்ற இந்தியாவின் நிலைப்பாடு சீனாவுக்கு நன்றாகவே தெரியும் என்று கூறினார்.

Tags : countries ,China ,India ,talks ,dispute ,peace talks , Kashmir Affairs, China, India
× RELATED ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை...