புழல் அடுத்த லட்சுமிபுரத்தில் பரபரப்பு வீட்டின் சாவியை தராததால் குழந்தையின் கழுத்து அறுப்பு: பக்கத்து வீட்டு வாலிபருக்கு வலை

புழல்: புழல் அடுத்த லட்சுமிபுரம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் விவேக்குமார். பெயின்டர். இவரது மனைவி பிரியா. தம்பதிக்கு ஒன்றரை வயதில் சாய் சரண் என்ற மகன் உள்ளான். பிரியாவின் அம்மா சாரதா (60) என்பவரும் இவர்களுடன் வசித்து வருகிறார். நேற்று காலை இவர்களது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆகாஷ் என்பவரின் தாய், தந்தை வீட்டின் சாவியை பிரியாவிடம் கொடுத்துவிட்டு சென்றதாக தெரிகிறது. இந்நிலையில் ஆகாஷ் நேற்று மாலை பிரியா வீட்டுக்கு வந்து, “எங்க அம்மா, அப்பா சாவி கொடுத்தார்களே எங்கே” என கேட்டு தகராறு செய்துள்ளார். பிரியா வீட்டு சாவியை தர மறுத்ததால் ஆத்திரமடைந்த ஆகாஷ் காய்கறி அறுக்கும் கத்தியை எடுத்து அருகில் இருந்த குழந்தை சாய் சரண் கழுத்தை அறுத்தார். அருகில் இருந்த பாட்டி சாரதாவையும் தாக்க முயன்றார். இதில் அவருக்கும் கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் சாய்சரணை மீட்டு எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். சாரதா அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்த புகாரின்பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆகாஷை தேடி வருகின்றனர்.

Advertising
Advertising

„ புதுவண்ணாரப்பேட்டை, காமராஜர் சாலையில்  உள்ள  கருமாரியம்மன் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.

„ விருகம்பாக்கத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தர்மன் (60) தனியார் பஸ்சில் அருப்புக்கோட்டையில் இருந்து சென்னைக்கு வந்தார். கோயம்பேடு வந்தபோது 1 லட்சம் பணம் வைத்திருந்ததாக கூறப்படும் கைப்பை மாயமானது. புகாரின்பேரில் கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.„ ஓட்டேரி, மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரேம் நாத் (27) நேற்று முன்தினம் நள்ளிரவு  ஓட்டேரி வரதப்பன் தெருவில் நடந்து சென்றபோது அவ்வழியாக வந்த 2 பேர் கத்தியால் தாக்கி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ₹1300 பறித்து சென்றனர்.புகாரின்பேரில் ஓட்டேரி போலீசார் ஓட்டேரியை சேர்ந்த கார்த்திக் (23) மற்றும் சதீஷ்குமார் (22) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.„ குன்றத்தூர், நீலம்பாள் நகர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் (24) நேற்று பைக்கில் வேலைக்கு சென்றபோது அனகாபுத்தூரை சேர்ந்த டிரைவர் பாஸ்கர் (19) என்பவர் ஓட்டி வந்த சொகுசு கார் மோதியதில் படுகாயம் அடைந்தார்.

„ வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் மனோகர் (28) குடிபோதையில் தகராறு செய்ததால் மனைவி சரிதா தாய் வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு சரிதாவை பார்க்க அயனாவரம், புது நகர், 3வது தெருவில் உள்ள வீட்டுக்கு மனோகர் சென்றுள்ளார். அங்கு மனைவி இல்லாததால் தகராறில் ஈடுபட்டார். சத்தம் கேட்டு அதே பகுதியை சேர்ந்த ராகவேந்திரன் (65), சீனிவாசன் (22) ஆகியோர் வந்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மனோகர் மறைத்து வைத்திருந்த கத்தியால் இடுப்பு, வயிறு பகுதிகளில் சரமாரியாக வெட்டிக்கொண்டார். மேலும், ராகவேந்திரனையும் வெட்டினார். இதில் இருவரும் ரத்தவெள்ளத்தில் விழுந்து துடித்தனர்.தகவலறிந்து அயனாவரம் போலீசார் வந்து படுகாயம் அடைந்த இருவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மனோகர் பலியானார்.

Related Stories: