டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: விளைநிலங்களை நம்பி இருக்கும் விவசாயிகளும் விவசாயக்கூலித் தொழிலாளர்களும் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கக்கூடிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். குறிப்பாக தனியாரோ, பொது துறையோ ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு விளைநிலங்களை கையகப்படுத்தவும், அதன் மூலம் எண்ணெய் கிணறுகள் அமைக்கவும் மக்களிடம் நலத்திட்டங்கள் என்ற பெயரில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட ஏதேனும் உதவிகள் செய்து நிலத்தை அபகரிக்க நினைத்தால் பொது மக்கள் ஏமாற மாட்டார்கள். எனவே, மத்திய அரசு தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு விவசாயிகளின் எதிர்ப்பை மீறி அனுமதி அளிக்கக்கூடாது.

தமிழக அரசு டெல்டா மாவட்ட விளைநிலங்களின் முழுமையான அவசியமான பயன்பாட்டை கவனத்தில் கொண்டு டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க உரிய நடவடிக்கையை காலம் தாழ்த்தாமல் எடுத்து விவசாயிகளையும், விவசாயக் கூலித்தொழிலாளர்களையும், அனைத்து தரப்பு மக்களுக்குமான விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: